Thursday 31 May 2012

கேட்டரிங், டெய்லர், வாஷ்மேன், பார்பர் பணிவாய்ப்பு


ஆர்மி சர்வீஸ் கோர்ஸ் சென்டர் அமைப்பின் வடக்கு பிராந்தியம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக இந்திய ராணுவப் பணிக்கு குக், வாஷ்மேன், பார்பர், சபாய்வாலா பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கிய பிரிவுகளும், காலி இடங்களும் ஆர்மி சர்வீஸ் கோர்ஸ் செண்டரின் சார்பாக குக் பிரிவில் 57 இடங்களும், வாஷ்மேன் பிரிவில் 29 இடங்களும், பார்பர் பிரிவில் 24 இடங்களும், சபாய்வாலா 35 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இவை தவிர டெய்லர், சிவிலியன் கேடரிங் இன்ஸ்ட்ரக்டர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

தேவைகள்:
இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அடிப்படைத் தேவையாகும். குக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய சமையல் முறைகளில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வாஷ் மேன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மிலிடரி மற்றும் சிவிலியன்களின் உடைகளை நன்றாக துவைக்கத் தெரிந்தவராய் இருக்க வேண்டும்.

பார்பர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தத் துறையில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு கால அனுபவம் பெற்றவராய் இருக்க வேண்டும். இதே போல் சபாய்வாலா பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களும் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிரிவு வாரியான தேவைகளை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

இதர தகவல்கள்:
இந்திய ராணுவப் பணி மையத்தின் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சுயவிலாசமிட்ட ஒரு கவரில் ரூ.22க்கு தபால் தலையை ஒட்டி பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் பதிவுத் தபாலில் பெறப்படும் கவரை முழுமையாக்கி 23.04.2012க்குள் திருப்பி அனுப்ப வேண்டும்.

முகவரி:
Commandant,
ASC Centre ( North),
Agaram Post,
Bangalore 560 007

இணையதள முகவரி: http://www.davp.nic.in/


சிறந்த எதிர்காலம்!!


அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளுக்கே சிறந்த எதிர்காலம்!!
இன்று பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களில் அறிவியல் மற்றும் கணிதம் படித்தவர்களுக்கே அதிக வேலை வாய்ப்பு உள்ளது என்ற ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. நீங்கள் தற்போதுதான் கல்லூரிப் படிப்பை வேறு புலத்தில் முடித்தவராக இருந்தாலும் சரி, கல்லூரிப் பருவத்தில் காலெடுத்து வைக்கப் போகின்றவராக இருந்தாலும் சரி, இதைக்கவனமாகப் படிக்கலாம்.

இன்றைய மாணவர்களுக்கு முதலிலேயே ஆறு இலக்க ஊதியம் பெற வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. இந்த இலக்கை நாம் படித்த அறிவியல் மற்றும் கணிதம் தவிர்த்த பிற படிப்புகளால் தர முடியுமா என்ற கேள்வியும் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. தற்போது வேலை வாய்ப்பு சந்தையில் இது போன்ற ஒரு நிலை இருந்தால் கூட எதிர்காலத்தில் இந்த நிலை கணிசமாக மாறிவிடும் என்று கணிக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான வேலை வாய்ப்பு சந்தையில் தற்போது மவுனமாக நிலவும் சூழ் நிலையின் அடிப்படையிலேயே இந்தக் கணிப்பு வெளியாகி உள்ளது.
எதிர்கால வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை பின்வரும் 3 காரணிகளின் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்படும் என்று வேலை வாய்ப்பு சந்தை சார்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
கம்ப்யூட்டரால் செய்ய முடியாத வேலைகளை செய்ய முடிவதன் மூலம் மட்டுமே எதிர்கால வேலை வாய்ப்பு சந்தையின் தன்மை இருக்கும். கம்ப்யூட்டர் செய்யும் வேலைகளையே செய்பவர்களின் வேலைக்கான வாய்ப்புகள் மந்தமாகும்.
தற்போது மிக அதிகபட்ச ஊதிய விகிதங்களுடன் இருக்கும் பல்வேறு பணிகளுக்கும் எதிர்கால வேலை வாய்ப்பு சந்தையில் கிராக்கி குறைவதுடன் ஊதிய விகிதங்களும் கணிசமாகக் குறையும் வாய்ப்புகள் உள்ளது.
தொழில் நுட்ப ரீதியான படிப்புகளைப் படித்தவர்கள் எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பான பணிகளில் இருப்பது அரிதாக மாறிவிடும். இதனால் அவர்கள் சுயமாக தங்கள் துறை சார்ந்த பணிகளைச் செய்வார்கள்.
எதிர்காலத்தில் அதிகபட்சமானோர் ஸ்டெம் (STEM) துறை சார்ந்த பணிகளிலேயே ஈடுபடுவதுடன் அவர்களுக்கே அதிக பட்ச ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது Science, Technology, Engineering, Mathematics ஆகிய துறைகளையே ஸ்டெம் என்னும் சுருக்கம் குறிக்கிறது. இனி ஒரு தனி நபரின் திறமையைச் சார்ந்தே நல்ல ஊதியமும், பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்குமே அன்றி, கல்வித் தகுதியைப் பொறுத்து அமையப் போவதில்லை.
தற்போதே அதிகமான பணிகளை கம்ப்யூட்டர் வாயிலாக செய்து வருகிறோம். இது இனியும் 2 மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே ஸ்டெம் துறைக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், பதவி உயர்வு மற்றும் சம்பள விகிதங்கள் அதிகரிக்கும்.
மொத்தத்தில் எதிர்காலத்தில் கம்ப்யூட்டரால் செய்ய முடியாத, மனிதனுக்கும் மனிதனுக்குமான பரிமாற்றங்களில் உள்ள பணிகளுக்கே நல்ல வாய்ப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது

திரைப்பட இயக்கம்-




அதிக அளவிலான மக்களை சென்றடையும் பரந்த மீடியாவாக சினிமா உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் வருடத்துக்கு ஆயிரம் சினிமாக்கள் வரை வெளிவருகிறது. இவற்றில் பெரும்பாலும் மும்பையை மைய்யமாக கொண்டு இயங்கும் பாலிவுட்டின் பங்களிப்பு அதிகம். இது தவிர தென் மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் அதிக அளவில் படங்கள் தயாராகின்றன.

வெவ்வேறு துறைகளை சார்ந்த தனித்திறன் வாய்ந்த நபர்களின் கூட்டு முயற்சியால் தான் சினிமா உருவாகிறது. குறிப்பாக நடிப்பு, தயாரிப்பு, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் போன்றவை சினிமாவுக்கு உருவாவதில் அதிக பங்காற்றுகின்றன. தொழில்நுட்பமும், படைப்புத்திறனும் சங்கமிக்கும் இடமாக சினிமாவை கூற முடியும். பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் தொடர்பிலும் சினிமா முக்கிய பங்காற்றுகின்றது. சர்வதேச தரத்தில் தயாராகும் படங்கள் கலாசார எல்லையை கடந்து வெளிநாடுகளிலும் வெற்றி பெறுகின்றன.
திரைப்படங்கள், செய்திப்படங்கள், விளம்பரங்கள், இசை ஆல்பங்கள் என அனைத்துமே பிலிம் மேக்கிங்கில் அடங்கும். சினிமா தயாரிப்பில் ஆணிவேராக இருந்து செயல்படுபவர் இயக்குனரே. தன்னுடைய அனுபவங்களையும், தனக்கு தெரிந்த நபர்களின் அனுபவங்களையும் கற்பனையுடன் கலந்து, தொகுத்து ரசிகர்களுக்கு வழங்குவது இவரது பொறுப்பு. இவ்வாறு ஒரு சினிமாவின் மூலம் ரசிகர்களை சிரிக்க, அழ, கோபப்பட வைக்க இயக்குனரால் முடியும்.
நல்ல திரைக்கதையே தேர்வு செய்வது, பொறுத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை முடிவு செய்வது, ஷூட்டிங்கை திட்டமிடுவது என ஒரு சினிமா உருவாவதில் கீழிருந்து மேல்மட்டம் வரை இவர்கள் பங்காற்றுகின்றனர். இது போட்டி மிகுந்த துறை. அதிக அளவில் படங்கள் தயாராவதால் சினிமாவில் வேலைவாய்ப்பும் அதிகம்.
தொழில்நுட்ப மற்றும் கலைத்திறன் வாய்ந்தவர்களுக்கு தங்களது உத்தியை வெளிப்படுத்த உதவும் சிறந்த துறையாக இது உள்ளது. நடிப்பு, இயக்கம் போன்றவற்றிக்கு பயிற்சி தேவையில்லை என கருதப்படுகிறது. எனினும் பயிற்சி பெற்றவர்கள் இதில் சிறந்து விளங்க முடியும். ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவற்றை முறையாக படித்து அறிந்து கொள்வதே சிறந்தது. பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, புனே மற்றும் பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் தமிழ்நாடு, சென்னை ஆகிய நிறுவனங்கள் திரைத்துறை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன.
சினிமாவில் நுழைய விரும்புபவர்கள் முதலில் அங்கீகாரம் பெற்ற பிலிம் இன்ஸ்டிடியூட்களில் படித்துவிட்டு பின் சினிமா நிறுவனங்களில் வேலைக்கு சேரலாம். இவர்களுக்கு அரசின் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், ஸ்டூடியோக்கள், தனியார் தயாரிப்பு நிறுவனங்கள், புராசசிங் லேப்களில் பணியாற்ற வாய்ப்புகள் அதிகம்.
இந்தியாவில் பல இடங்களில் திரைப்படக் கல்லூரிகள் நடத்தப்படுவதை அறிவீர்கள். புனேயிலுள்ள திரைப்படக் கல்லூரி அதன் தரத்திற்காக அறியப்படுவது. திரைப்படம் மற்றும் டிவி துறை தொடர்பான படிப்புகள் இங்கே நடத்தப்படுகின்றன. பொதுவாக இந்த நிறுவனத்தின் படிப்புகளுக்கான விளம்பரங்கள் மீடியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது.
இந்த விளம்பரம் வெளியான பின்பு நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளுக்காக நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது.
திரைப்படத் துறை படிப்புகள்
டைரக்சன், சினிமாட்டோகிராபி, ஆடியோகிராபி, எடிட்டிங், ஆக்டிங், ஆர்ட் டைரக்சன் மற்றும் புரடக்சன் டிசைன், அனிமேஷன் அண்ட் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பீச்சர் பிலிம் ஸ்கிரீன்பிளே ரைட்டிங் ஆகிய பிரிவுகளில் இந்த நிறுவனம் படிப்புகளை நடத்துகிறது. டைரக்சன் மற்றும் சினிமாட்டோகிராபி, ஆடியோகிராபி, எடிட்டிங் ஆகியவை 3 ஆண்டு பி.ஜி., டிப்ளமோ படிப்புகளாகும். பட்டப்படிப்பு தகுதி. தலா 12 சீட்களே உள்ளன.
ஆக்டிங் படிப்பானது 2 ஆண்டு பி.ஜி., டிப்ளமோ படிப்பாகும். பட்டப்படிப்பு தகுதி. ஆர்ட் டைரக்சன் மற்றும் புரடக்சன் டிசைன் படிப்பும் 2 ஆண்டு பி.ஜி., டிப்ளமோ படிப்பு தான். ஆர்க்கிடெக்சர், அப்ளைட் ஆர்ட் போன்றவற்றில் பட்டப்படிப்பு படித்திருப்பவர் மட்டுமே இதில் சேர முடியும்.
அனிமேஷன் அண்ட் கிராபிக்ஸ் படிப்பானது ஒன்றரை ஆண்டு சான்றிதழ் படிப்பாகும். இந்தப் படிப்பில் சேர பைன் ஆர்ட்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவருக்கு முன்னுரிமை தரப்படுகிறது. அடிப்படையில் பிளஸ் 2 தான் இதற்கான தகுதியாகும். பீச்சர் பிலிம் ஸ்கிரீன் பிளே ரைட்டிங் படிப்பானது ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பாகும். தகுதி பட்டப்படிப்பு.
டிவிபடிப்புகள்
டைரக்சன், எலக்ட்ரானிக்ஸ் சினிமாட்டோகிராபி, வீடியோ எடிட்டிங், ஆடியோகிராபி மற்றும் டிவி இன்ஜினியரிங் ஆகியவை இத்துறையில் தரப்படும் படிப்புகள். டைரக்ஷனும் எலக்ட்ரானிக்ஸ் சினிமாட்டோகிராபி படிப்பும் ஒரு ஆண்டு பி.ஜி., சான்றிதழ் படிப்புகளாகும். பட்டப்படிப்பு தகுதி. வீடியோ எடிட்டிங்கில் ஒரு ஆண்டு பி.ஜி., படிப்பும் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பும் நடத்தப்படுகின்றன. இதற்கும் பட்டப்படிப்பே தகுதி.
ஆடியோகிராபி மற்றும்டிவிஇன்ஜினியரிங்கில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு தகுதி. மேலும் பிளஸ் 2ல் இயற்பியலை படித்திருப்பது அவசியம். இந்தப் படிப்புகள் அனைத்துக்குமே தலா 8 சீட்கள் உள்ளன. 3 ஆண்டு பி.ஜி. டிப்ளமோ படிப்புகளுக்கு ஆண்டுக்கு கல்விக் கட்டணம் மட்டும் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பெறப்படுகிறது.
ஆக்டிங் கட்டணம் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம். ஆர்ட் டைரக்ஷனுக்கு ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய். அனிமேஷன் படிப்புக்கு ரூ.1.20 லட்சம் ஆண்டுக் கட்டணமாகப் பெறப்படுகிறது. ‘டிவிபடிப்புகளுக்குத் தோராயமாக ரூ.50 ஆயிரம் ஆண்டு தோறும் பெறப்படுகிறது.
வெறும் திரைப்படக் கவர்ச்சியால் உந்தப்பட்டு இந்தப் படிப்புகளில் சேராமல் யோசித்து எடுக்கப்படும் லட்சிய முடிவால் சேர்ந்து பின்பு இயல்பான கிரியேடிவ் திறன்களைக் கொண்டு இந்தப் படிப்புகளை முடித்தால் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம்.

Tamilnadu Film Institute in Tharamani Chennai

No 3, Inside MGR Film City, Canal Bank Road, Tharamani, Chennai - 600113
+(91)-(44)-22541057